உறுதியானது தொடரியின் வெளியீடு..!

1280x720-jig
‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ் கைவசம் ‘தொடரி, கொடி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2’ என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதுமட்டுமன்றி தனுஷ் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ‘தொடரி’ படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘பூச்சியப்பன்’ என்ற பெயரில் தனுஷும், அவருக்கு ஜோடியாக ‘சரோஜா’ என்ற பெயரில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘காட் பிக்சர்ஸ்’ மூலம் பிரபு சாலமனே தயாரிக்கும் இதற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸான இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்துள்ளது. நேற்று படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்து க்ரீன் சிக்னலிட்டுள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியிடவுள்ளது ‘சாய் வி சினிமாஸ்’ நிறுவனம்.

Leave a Response