தீபாவளிக்கு வெளியாகும் சிங்கம்-3 மோஷன் போஸ்டர்


s3-suriya-masssuriyaஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சிங்கம்-3 படத்தின் மோஷன் போஸ்டரை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹரியின் வெற்றி படமான  ‘சிங்கம்’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக சிங்கம்-3 (எஸ்-3) உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வருகிற டிசம்பர் 16 அன்று படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


 

Leave a Response