விஜய் சேதுபதியின் ’மெல்லிசை’ படத்தின் தலைப்பு மாற்றம்


vijay-sethuஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி  நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம். வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த  படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர்.

புதுமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்பட்த்தை ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்திருக்கிறது.

‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ‘ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே.சதீஷ்குமார்.

வருகின்ற நவம்பர் மாதத்தில் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படம்.


 

Leave a Response