
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாரீன் ஷுட் தற்போது முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு ரெடியாகி வருகின்றனர். இப்படத்தில் காமெடியனாக நடிக்க கருணாகரனிடம் நீண்ட நாட்கள் பேச்சு வார்த்தை நடந்து வந்தது, அவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏதும் கூறவில்லை. தற்போது கருணாகரன் முதன் முறையாக தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளேன், மிக்க மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.


