விஷ்ணுவுக்கு ஜோடியான கேத்ரின் தெரசா..!

catherine-tresa-20

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு பிறகு விஷ்ணு நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘இடம் பொருள் ஏவல்’. தற்போது, விஷ்ணு சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கிவரும் இப்படத்தை விஷ்ணுவே தனது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலமாக தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இதன் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ புகழ் கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளாராம். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

Leave a Response