ஜாலியா போங்க, சிரிச்சுட்டு வாங்க! ‘கதாநாயகன்’ சினிமா விமர்சனம்

KATHANAYAGAN OTTRAN2
‘கதையைப் பத்தி கவலையில்லை’, ‘லாஜிக்கா அது யாருக்கு வேணும்?’, ‘படம்னா, போனோமா சிரிச்சோமா வந்தோமானு இருக்கணும்.’
-இந்த டேஸ்டில் சினிமா பார்க்க விரும்புபவரா நீங்கள். அப்படியெனில் இந்த படம் உங்களுக்குத்தான்!

‘ஊர் வம்புக்கெல்லாம் போகக்கூடாதுப்பா’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட ‘கதாநாயகன்’க்கு ‘அநியாயத்தை தட்டிக் கேட்கிறவன்தான் ஆம்பிளை’ என்ற நினைப்பில் இருப்பவரின் மகள் மீது காதல் வந்தால் சுவாரஸ்யத்துக்கு கேட்கவா வேண்டும்? அந்த சுவாரஸ்யங்கள்தான் கதை.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மரகத நாணயம் என சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள முருகானந்தம், இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். (ஒரு காட்சியில் வந்து தலை காட்டியும் போகிறார். படம் நெடுகவும்கூட நடித்திருக்கலாம்!) குட் அட்டெம்ட்!

muruganatham

எதற்கெடுத்தாலும் பயப்படும் விஷ்ணு விஷால் காதலிக்கும் விஷயத்தில் பயப்படுவதில்லை, காதலியோடு டூயட் ஆட பயப்படுவதில்லை. குடித்து விட்டால் எதிரியை புரட்டியெடுக்க பயப்படுவதில்லை. இதுதான் படத்தில் விஷ்ணு விஷாலின் கேரக்டர்! ரசிக்கும்படி உணர்ந்து செய்திருக்கிறார்!

KATHANAYAGAN OTTRAN 1

தன் படத்தில் பிரேமுக்கு பிரேம் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிற ரெகுலர் ஹீரோவாக இல்லாமல் இருப்பதற்காகவே விஷ்ணு விஷாலை தனியாக பாராட்டலாம்!!

கேத்ரின் தெரசா… மலர்ந்து சிரிப்பது, அளவாய் உடுப்பது, அலுங்கிக் குலுங்கி ஆடுவது என டிபிகல் தமிழ் சினிமா ஹீரோயின்! ‘நீயெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா ஃபர்ஸ்ட நைட் பண்ற ஆளா?’ என விஷ்ணுவை உசுப்பேற்றும் அந்த பெட்ரூம் சீன் செம ஹாட்!

சூரி – விஷ்ணு காமெடி காம்போ செமையாய் ஒர்க் அவுட் ஆகிறது. இன்னும் சில படங்கள் சேர்ந்து பண்ணுங்க புரோ!

அப்படி வந்துவிட்டு இப்படி போகிறார் விஜய் சேதுபதி. அவர் அடிக்கும் லூட்டிக்கு தியேட்டரில் அப்ளாஸ் மழை!

vijay-Sethuspathi

மொட்டை ராஜேந்திரனுக்கு யாரேனும் புதிதாய் காமெடி டிராக் எழுதினால் தேவலை. டெம்ப்ளேட் காமெடியில் மனிதர் வரவர போர்!

ஆனந்த்ராஜ் அவர் பங்குக்கு வயிறு புண்ணாக்கிப் போகிறார்!

நான்கைந்து பாடல்கள் இருந்தாலும் ‘ஒன் நெனைப்பு’ பாடல் அதிகம் ஈர்க்கிறது. இசை: ஷான் ரோல்டன்

ஜாலியா போங்க, சிரிச்சுட்டு வாங்க!

Leave a Response