சமுத்திரக்கனிக்கு ஜோடியான ரம்யா பாண்டியன்

dc-cover-6ol9r8c1qj2hetpvamgsudpbp1-20160917225613-medi

‘அப்பா’ படத்தின் வெற்றிக்கு பிறகு சமுத்திரக்கனி நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘கொளஞ்சி’. தற்போது, ‘கிட்னா’ எனும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் சமுத்திரக்கனி.

‘ஆண் தேவதை’ என டைட்டில் வைத்துள்ள இப்படத்தை ‘ரெட்டச்சுழி’ புகழ் தாமிரா இயக்கவுள்ளார். இதில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘ஜோக்கர்’ ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கவுள்ள இதற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பக்ருதீன் என்பவருடன் இணைந்து ‘சிகரம் சினிமாஸ்’ மூலம் இயக்குநர் தாமிராவே இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

Leave a Response