திடீர் அழைப்பு விடுத்த சமுத்திரக்கனி…

Thondan
சமுத்திரகனி இயக்கத்தில், வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தொண்டன்’. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், சுனைனா, அர்த்தனா, சூரி, நமோ நாராயணன், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். பாடல்களை யுகபாரதி மற்றும் விவேக் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சமுத்திரகனி ஆம்புலன்ஸ் டிரைவராகவும், சுனைனா ஒரு டீச்சராகவும் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட நடிகர் விக்ராந்த் கூறியதாவது, தனக்கு சமுத்திரகனி அவர்களிடமிருந்து ஒருநாள் திடீரேனே தன்னுடைய கைபேசிக்கு அழைப்பு வந்ததாம். அப்போது பேசிய சமுத்திரகனி, தான் ஒரு புதிய படத்தை இயக்க போவதாகவும், அதில் ஒரு நல்ல கதாபாத்திரம் இருப்பதாகவும், அதில் நீ தான் நடிக்க வேண்டும் என விக்ராந்த்திடம் சமுத்திரகனி கூறியுள்ளார். சமுத்திரகனி என்றவுடன், என்ன கதை என்றெல்லாம் கேட்காமல் சமுத்திரகனி அவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் உடனடியாக ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் விக்ராந்த். சமுத்திரக்கனி கேட்டவுடன், எங்கு, எப்போது, தான் ஷூட்டிங்குக்கு வர வேண்டும் என்று மாட்டும் தான் சமுத்திரக்கனியிடம் கேட்டுக்கொண்டதாக சொல்கிறார் விக்ராந்த்.

இப்படத்தில் தான் ஒரு ஆம்புலன்ஸ் அட்டெண்டராக நடித்துள்ளதாகவும் அந்த கதாப்பாத்திரம் அவருக்கு ஒரு நல்ல திருப்தியை கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார் விக்ராந்த். அப்பிடி என்னங்க திருப்தி இந்த கதாபாத்திரத்தில்? என்று கேட்டுடன்…இப்படத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை இப்படத்தில் நன்றாகக சொல்லியுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி, என்கிறார் விக்ராந்த். அதுமட்டுமின்றி, காதல் விவகாரத்தில் சிக்கும் சில பெண்கள், சில நேரங்களில் ஆசிட் அட்டாக் மற்றும் வன்மையான தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர். அத்தகைய பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொண்டு, சமுதாயத்தில் வாழ வேண்டும் என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் காட்சியாகியுள்ளார் இயக்குனர் என்று சமுத்திரகணியை பற்றி பெருமையாக சொல்கிறார் விக்ராந்த். “இப்படம் ஒரு நல்ல பேமிலி டிராமா. அதுமட்டுமின்றி மனித நேயம் பற்றி சொல்லக்கூடிய ஒரு நல்ல படம். ஆடியென்ஸ் படத்தை பார்த்து முழு திருப்தியுடன் செல்வார்கள்.” என்கிறார் விக்ராந்த்.

நடிகர் விக்ராந்த் அடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘அறம் செய்ய பழகு’ மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு – 2’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

‘தொண்டன்’ மே 26 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய மனித நேயம் சொல்லப்படுகிறது என்று திரையில் பார்ப்போம்…

Leave a Response