கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா

‘ஃபோக்கஸ் பிலிம்ஸ்’ தயாரிக்கும் முதல் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான். இந்தியாவிலேயே முதல் கடல் கன்னி படமாக இது இருக்கும். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் டைரக்ட் செய்கிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 சம்மர் வெளியீடாக இப்படம் வருகிறது.

அதன் பிறகு கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பால சுப்ரமணியெம் மேற்கொள்கிறார்.

தயாரிக்கும் நிறுவனம் ஃபோக்கஸ் பிலிம்ஸ்.

Leave a Response