‘ரெமோ’வை கைப்பற்றிய ‘லோட்டஸ் ஃபைவ் ஸ்டார்’ நிறுவனம்

cmimhbpviaaa_kg

‘ரஜினி முருகன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ரெமோ’. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘ரஜினி முருகன்’-க்கு பிறகு இதிலும் சிவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ’24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

லேடி நர்ஸ் கெட்டப்பில் சிவா நடித்துள்ள இதன் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் & பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது படக்குழு. இந்நிலையில், படத்தை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளியிடும் உரிமையை ‘லோட்டஸ் ஃபைவ் ஸ்டார்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். பைரஸி காரணமாக ‘ரெமோ’வை ஒரு நாள் கழித்து வெளிநாடுகளில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response