பிரம்மாண்ட திரைபடங்களை தயாரிக்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “டான்” .
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும்
பிரபல காமெடி நடிகர்கள் சூரி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன்,
RJ விஜய், சிவாங்கி
மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படபிடிப்பு இன்று காலை கோவையில் உள்ள KPR கல்லூரியில் நடைப்பெற்றது
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து
நடிகர் சிவகார்த்திகேயனின்
SK PRODUCTIONS இத்திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறது.