“உன்னோடு கா” திரைப்பட விமர்சனம்:

Unnodu Ka Review
நடிகர்கள்: ஆரி, மாயா, பாலசரவணன், மிஷாகோஷால், பிரபு, ஊர்வசி, கை தென்னவன், ஸ்ரிரன்ஜினி, மன்சூரலிகான், நாராயண, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மனோபாலா, தேனி முருகன், ராஜாசிங், வினோத்சாகர் மற்றும் ஷண்முக சுந்தரம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – நல்லம்மை ராமநாதன், திரைகதை, வசனம் & இயக்கம் – ஆர்.கே, கதை – அபிராமி ராமநாதன், இசை – சத்யா, ஒளிப்பதிவு – சக்தி saravanan, எடிட்டிங் – சேவியர் திலக், கலை – என்.செந்தில் குமார், நடனம் – கல்யான், சண்டைபயிற்சி – விஜய் ஜாகுவார், பாடல்கள் – விவேக, மதன் கார்கி, சாரதி, ஆர்.கே.

“உன்னோடு கா”– பள்ளி நாட்களில் “பழம் “கா” பேசாத யாரேனும் உண்டா? அந்த தலைப்பை படம் பெயராக வைத்தமைக்கு இந்த குழுவுக்கு “பழம்” விடலாம்.குடும்ப பகை தீர்க்க நண்பர்கள் ,தங்கள் வாரிசுகளின் மூலம் தீர்வு காண செய்யும் சாதாரண நல்ல விஷயமே படம்.

சிவா, அபிராமியாக வரும் ஆரி, மாயா நல்ல தேர்வு, இளையதிலகம் பிரபுவின் பாஸிடிவ் அப்ரோச்,
அவர் பேசும் “நம்பிக்கை தானே எல்லாமே” ஆஹா அருமை.. எதிரெதிர் துருவங்களை இணைக்க, திரைக்கதை போகும் பாதை சற்று டல்லடித்தாலும் நகைச்சுவை பாதுகாக்கிறது.

இசையைம்ப்பாளர் சத்யா வின் இசை கச்சிதம். இயக்குனர் RK அவர்கள் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். மன்சூரலிகான் கதாபாத்திரம் நச், நடிப்பு தேவைக்கேற்ற அளவு. தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் தரமான பொழுதுப்போக்கு அம்சத்துடன் ஒரு படத்தை வழங்கியுள்ளார். காமம், கொச்சை வசனம் இல்லாத, சிறியவர்கள், பெரியவர்கள் என குடும்பத்துடன் நம்பி சென்று பார்க்கக்கூடிய ஒரு படம்.

Leave a Response