“கோ 2” திரைப்பட விமர்சனம்:

Ko 2 Review
நடிகர்கள்: பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பாலசரவணன், இளவரசு, ஜான் விஜய், நாசர், கருணாகரன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – R.S.இன்போடைன்மென்ட் சார்பாக எல்ரட் குமார், இயக்கம் – சரத், இசை – லியோன் ஜேம்ஸ், வசனம் – பாக்கியம் ஷங்கர் & K.ராஜாராமன், ஒளிப்பதிவு – பிலிப்.R.சுந்தர் & வெங்கட், படத்தொகுப்பு – R.ரிச்சர்ட் கெவின்.

” கோ”2—- இரண்டு கொலைகள், அந்த கொலைகளை செய்த அமைச்சர் மற்றும் அவரது மகன்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய தண்டனையை தர கதாநாயகன் போராடுவதே கதை.. அதன் காரணமாக முதல்வரை கடத்த திட்டமிடுதல், சமூக அக்கறையுடன் ஹீரோ பேசும் வசனங்கள் “தீ” போல உள்ளன.. வசனம் பேசுவதில் இன்னமும் கவனமாக இருந்தால் பாபிசிம்ஹா பலமாக வலம்வருவார். குளுமையாக ஹீரோயின் நிக்கி கல்ராணி ஜமாய்க்கிறார். “கோகிலா” பாடல் மெட்டு இனிமை. படமாக்கிய விதம் ஒளிப்பதிவாளர்களின் திறமைகளை பாராட்டலாம். லோக்கேஷன் தேர்வு OK.. இளவரசு” தில்லைநாயகமாக படத்தில் தன் பங்கை பிரமாதமாக செய்துள்ளார். ஊழல், மற்றும் கொலைகார அமைச்சரை சிக்கவைக்க முதல்வரை கடத்துவது புதியதாக இருந்தது. இயக்குனர் வித்தியாசமாக யோசித்து கமர்சியலாக “கோ 2” படத்தை தந்த காரணமாக பாராட்டப்படுகிறார்.

Leave a Response