“டார்லிங் 2” திரைப்பட விமர்சனம்:

Darling 2 Review
நடிகர்கள்: அரவிந்தனாக கலையரசன், ராமாக ரமீஸ், ரப்பியாக காளிவெங்கட், பாலாஜியாக ஹரி, வால்பாறை வரதனாக முனிஸ்காந்த் ராமதாஸ், சங்கராக அர்ஜுனன் மற்றும் ஆயிஷாவாக மாயா.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம்: சதீஷ் சந்திரசேகரன், இசை:ரதன், ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பு: மதன், வசனம்: ராமகிருஷ்ணன், பாடல்கள்: முத்தமிழ், தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல்ராஜா.

“டார்லிங்”-2, நண்பர்களுக்குள் உள்ள ஒற்றுமை, உரிமை, கிண்டல், ஜாலி அனைத்துடன் நீரில் கலந்த ஒரு மிரட்டல் கதை. ஐந்து நண்பர்கள், ஒரு நண்பன் காதல் பிரச்சனை, அவனிடம் விளையாட்டாக ஒரு பொய்(அவன் பிறந்தநாள் காரணமாக), திரில் தர அவசரப்பட்டு பொய்சொல்லிவிட, அவன் காதலிக்கும் பெண்ணிடமும் ஒரு பொய் சொல்லி ஊருக்கு அனுப்பிவைத்து விட, அதனால் அந்த ஜோடி தற்கொலை செய்துகொள்கின்றன.

இந்த ஜோடியின் ஆவிகளால் மற்ற நான்கு நண்பர்கள் படும் ஆனந்த அவஸ்தைகள் செம சிரிப்பு, மற்றும் சில காட்சிகளில் திக் திக் என அமர்க்களப்படுத்தி வந்துள்ள படம் தான் “டார்லிங் 2”. காளி வெங்கட் நடிப்பு பிரமாதம். நண்பர்களுடன் லாட்ஜ் ரூமில் தங்கிவிட்டு வெக்கேட் செய்யும் போது ஒரு நண்பன் அங்கு தரும் இலவச பொருட்களை கொண்டுவருவது நிஜமான கேரக்டரை காட்டியது போல பொருந்துகிறது. முனிஸ்காந்த தாயத்து கட்டச்சென்று பேய்அடி வாங்கிவருவது கல கல, பல இடங்களில் வசனங்கள் கச்சிதமாக உள்ளன. ஆயிஷா திரில், பகீர். ஒரு பாடல் அருமை….

என்ன ஆனாலும் உயிர்பொனாலும் நட்பில் விட்டுக கொடுக்காத நண்பர்கள் மனசு பெரிசு. ஒருவரை ஒருவர் காப்பாற்ற போராடுவது அருமை. கோடை விடுமுறையில் குழந்தைகள் விரும்பி செல்லும் படமாக இருக்கிறது “டார்லிங் 2”.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response