பாபு கணேஷ் மிக திறமையானவர், அவர் மகன் ரிஷிகாந்த் நன்றாக வருவார் – கலைபுலி S தாணு பெருமிதம்:

Kattu Puraa Audio Launch
சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் மார்ச் 28ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார்.

விழாவில் பேசிய கலைப்புலி தாணு, பாபு கணேஷ் திரைத்துறையில் உள்ள அணைத்து கிராப்டுகளையும் நன்கு அறிந்தவர் மற்றும் திறமை மிக்கவர் என்றார். அவருடைய மகன் ரிஷிகாந்த் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார், அவர் ஒரு நடிகனாக இருப்பதற்கு தேவையான பல கலைகளை பயின்றுள்ளார். அவர் பிற்காலத்தில் திறமைமிக்க நடிகராக வலம் வருவார் என்றார். அதுமட்டுமின்றி, தயாரிப்பாளர் கலைப்புலி சேகர் அவர்கள் ஒரு கதை வைத்துள்ளார், அந்த கதைக்கு ரிஷிகாந்த் மிக பொருத்தமானவர் என்றார். பாபு கணேஷ் அந்த கதையை கலைபுலி சேகரிடமிருந்து கேட்டு வங்கி வரவேண்டும். அப்படி பாபு கணேஷ் அந்த கதையை கொண்டுவந்தால், தான் அந்த கதையை படமாக தயாரித்து அதில் ரிஷிகாந்தை கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கொடுப்பேன் என்றார். பாபு கணேஷ் தன்னுடைய குடும்பத்தில் ஒருவர், எனவே அவருக்கு தான் தரக்கூடிய பரிசு, அவர் மகன் ரிஷிகாந்த் நடிக்க தான் தயாரிக்கும் படமாக தான் இருக்கும் என்றார்.

விழாவில் கிரிக்கெட்வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரமணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி , பாடகர் கானாபாலா, பாடகி வாணிஜெயராம், இயல்இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் ‘பிலிம் சேம்பர்’ காட்ரகட்டபிரசாத், ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Response