“ஆறாது சினம்” திரைப்பட விமர்சனம்:

Aarathu Sinam FB
நடிகர்கள்: கதையின் நாயகன் போலிஸ் அதிகாரி அரவிந்தாக அருள்நிதி, அரவிந்தின் மனைவி மியாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், காவல்துறை இணை ஆணையாளர் செங்கோடனாக ராதாரவி, அரவிந்த் அம்மாவாக துளசி, பத்திரிக்கையாளர் வர்ஷாவாக ஐஸ்வர்யா தத்தா, காவல்துறை அதிகாரிகள் ஆரோகியராஜாக சார்லியும், சர்குனமாக ரோபோ சங்கரும் கதாபாத்திரம் ஏற்றுள்ளனர். அமைச்சராக RNR மனோகர், வில்லன் சந்தோஷாக இயக்குனர் கெளரவ்.

தொழில்நுட்ப கலிஞர்கள்: கதையை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் எழுதியுள்ளார், ஒளிப்பதிவை அரவிந்த் சிங் கவனித்துகொள்ள, படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணா செய்துள்ளார். சண்டைப்பயிற்சியை திலிப் சுப்ராயன் மேற்கொள்ள, இசையை s.s.தமன் அமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக N.ராமசாமி தயாரிக்க ஈரம் புகழ் அறிவழகன் திரைகதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

கதை: மலையாளத்தில் “மெமரீஸ்” என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த “ஆறாது சினம்”. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி அவர் படும் இழப்புகள் அந்த தவிப்பு படமாக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரி படும் மன உளைச்சல், அவர் மதுவுக்கு அடிமையாகி அவரும் மற்றவர்களும் என்ன ஆகிறார்கள் என்பது தான் மீதமுள்ள கதை.

அருள்நிதிக்கு காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் மிக கச்சிதம். ஐஸ்வர்யா ராஜேஷ் குறைந்த காட்சிகளில் தென்பட்டாலும் தன்னுடைய பாத்திரத்தை அற்புதமாக செய்துள்ளார். இணை ஆணையாளர் கதாபாத்திரத்தில் வரும் ராதாரவி எப்போதும் போல எதார்த்த நடிப்பு. பத்திரிக்கை ரிப்போர்டராக வரும் ஐஸ்வர்யா தாத்தாவுக்கு கச்சிதமான கதாபாத்திரம். காவல்துறை அதிகாரியாக வரும் ரோபோ சங்கர் அளவான நகைச்சுவையில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரி சார்லி, அமைச்சர் RNR மனோகர் மற்றும் வில்லன் கௌரவ் கதாபாத்திரங்கள் கச்சிதம்.

மதுவுக்கு அடிமையாகி தன்னுடைய தன்மானத்தை இழந்த காவல்துறை அதிகாரியான அருள்நிதி, மீண்டும் பணியில் சேர்ந்து போதையில் நடத்தும் புலனாய்வு கதையில் ஒரு வித்யாசமான முயற்சி. பல நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாகவும், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கதாபாத்திரம் ஏற்றுள்ளனர், இருப்பினும் அருள்நிதி அந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானவர். குற்றவாளியை கண்டுபிடிக்க அருள்நிதியின் திட்டமிடுதல் அடுத்து என்ன என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைக்கிறது. தமனின் இசை ஓகே.

ரிப்போர்டர் வர்ஷா கதாபாத்திர அறிமுக காட்சி கொஞ்சம் நம்பகத்தன்மை இழக்கிறது. திரைகதை மிக மெல்லமாக செல்கிறது, காரணம் இப்படம் மலையாள படத்தின் ரீமேக் தான். இயக்குனர் கொஞ்சம் முயற்சி செய்து திரைகதையை வேகபடுத்தி இருந்தால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். கௌரவ் கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ் அருமை.

மொத்தத்தில் “ஆறாது சினம்” அருள்நிதியின் அடுத்தக்கட்ட நடிப்புக்கு ஒரு வளர்ச்சி பாதை.

Leave a Response