நல்ல நடிகர்களை இந்த தமிழ் சினிமா அடையாளப்படுத்துவதில்லை! – குற்றம்சாட்டும் வரலக்ஷ்மி

2019ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் “ஆ கரால ராத்திரி”. இத்திரைப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கினார். இப்படம் வர்த்தகரீதியாக வெற்றி பெற்றதோடு, பல விருதுகளையும் இப் பாடம் வென்றது.

இத்திரைப்படம் மீண்டும் 2020ம் ஆண்டில் தெலுங்கில் “அநாகநக ஓ அத்திதி” என்று பெயரிடப்பட்டு OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் இப்போது தமிழில் தயாராகியுள்ளது.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கிய தயாள் பத்மநாபன், தற்போது தமிழில் “கொன்றால் பாவம்” என்ற பெயரில் இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, சுப்ரமணியன் சிவா, கவிதா பாரதி, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர் சிலதினங்களுக்கு முன்பு, பத்திரிக்கையாளர்களுக்கு பிரதியேகமாக காண்பிக்கப்பட்டது. அதில் வரலக்ஷ்மி சரத்குமார் ஆக்ரோஷமாக தெரிந்தார். காட்சிகளை பார்க்கும்போது ஒரு பழி வாங்கும் கதை போல் தெரிகிறது.

டீஸர் காட்சிகளை காண்பித்த பிறகு, படக்குழுவினர் பத் திரிக்கையாளர்களிடம் உரையாடினர். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வரலக்ஷ்மி சரத்குமார், “நான் ஏன் தமிழ் சினிமாவில் நடிப் பதில்லை என்று கேட்கிறீர்கள். என்னை நடிக்க அழைத்தால் நான் தமிழ் சினிமாவில் நடிக்கத் தயார். என்னுடைய திறமையை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. என்னுடைய நடிப்பு திறனை பார்த்து சில நடிகர்கள் பயப்படுகின்றனர். நான் நடித்த “சர்க்கார்” மற்றும் “சண்டக்கோழி 2” ஆகிய இரண்டு திரைப்படங்களில் என்னுடைய நடிப்பும், கதாபாத்திரமும் பாராட்டி பேசப்பட்டது. ஆனால் எனக்கு அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு எதுவும் சரியாக அமையவில்லை. இதற்கு காரணம், என்னுடைய நடிப்பு திறனை பார்த்து சில நடிகர்கள் பயப்படுகின்றனர். அதனால் தான் எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்க சரியான கதாபாத்திரமோ அல்லது சரியான வாய்ப்போ கிடைக்கவில்லை. என்னை போல் பல திறமையான நடிகர்களை தமிழ் சினிமா அடையாளப்படுத்துவதும் இல்லை, பயன்படுத்திக்கொள்வதும் இல்லை.” என மிக வருத்ததுடன் இந்த குற்றச்சாட்டை வைத்தார் வரலக்ஷ்மி சரத்குமார்.

Leave a Response