வேதாளம் திரைவிமர்சனம் – அஜித்தின் அல்டிமேட் பிளாப்.!

ajith-vedalam-review

வேதாளம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தும் படம். படத்தின் ஓப்பனிங்-ல் வரும் ஆல்பா பீட்டா டீம், ‘மோட்டோ பப்லு’ கார்டூன் பார்த்தது போல் இருந்தது. அந்த கார்டூன் மனிதர்களை வைத்து இன்டெர்நேஷனல் வில்லன் என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ராகுல்தேவ் அதுக்கும் மேல. ரயில் நிலையத்தில் அஜித்தை வைத்து நான்கடவுள் ராஜேந்திரன் அடிக்கும் லூட்டி ஓவர் மொக்கை. லாயராக வரும் சுருதிஹாசனுக்கு, படத்தில் கிழிஞ்ச துணியை கொடுத்து லாயருக்கு இருக்கும் மரியாதையையும் புல் டேமேஜ் பண்ணிடாங்க. அவருக்கு எத்தனை முறையோ சொல்லியாச்சு.. திரும்பவும் சொல்லிருவோம், ட்ரஸ்ச புதுசு புதுசா கிழிச்சுட்டு வந்த மட்டும் நடிச்சிட்டதா அர்த்தம் இல்ல, அதுக்கு பேரு வேற. கலைக்குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ருதியிடம் ஸ்ருதி பாட்டில் மட்டும் தான் உள்ளது. சூரியின் அல்டிமேட் காமெடிகள் அட்ட பிளாப். ஒரு சில இடங்களில் லேசாக சிரிப்பு எட்டிப்பாக்குது.

படத்தின் நாயகன் அஜித் ஏன் இப்படி ஒரு கதையை தேர்வு செய்தார் என்பதே படம் பார்த்து முடித்ததும் உதிக்கும் முதல் கேள்வி. யாராவது டான் கதை சொன்னால் கண்ண மூடிக்கிட்டு ஓகே சொல்லிருவாரோனு எண்ண தோன்றுகிறது. படத்தின் முதல் பாதியில் வில்லன் அஜித்தை நெருங்கும் முன், அவரே வில்லன்கள் இருக்கும் இடத்தை தேடிச்சென்று தாக்குவதும், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஒரு புத்தி கூர்மையான கதாபாத்திரத்தில் நடித்து, ஒரு மிகப்பெரிய  பிரமிப்பான இன்டர்வெல் காட்சிகளை அமைத்து விட்டு, மண் சட்டியில் உள்ள வெண்ணையை மடார் என உடைத்து வீணடித்ததுபோல் உள்ளது இரண்டாம் பாதி.

பிளாஷ்பேக்கில் வரும் வேதாளம் கெட்டப் வட்டிக்கு விடும் பஜன்லால் சேட்டைவிட மோசமாக உள்ளது. ஒரு டானுக்கு உண்டான மதிப்பேபோய்விட்டது அந்த கதாபாத்திரத்தால். பழைய படங்களில் மருவை ஒட்டி மாறுவேடம் போடுவது போல், தலயில் உள்ள முடியை வெட்டி யாருக்கும் அடங்காத வெறிபிடித்த டான் என பஜன் லால் சேட்-யை காட்டிய சிவா எங்கோ போய்விட்டார்.

அஜித் நடிக்கிறேன் என்ற பெயரில் நாடகம் தான் நடத்தியுள்ளார். ஒரு இன்டர்நேஷனல் டான் எப்படி இருப்பார் என சிவாவும், அஜித்தும் போட்டோவிலாவது பார்த்துள்ளார்களா என பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது இந்த படம். 1000 தோட்டாக்கள் துப்பாக்கியிலிருந்து ஒரே நேரத்தில் சீரிப்பாயும்போது, ஒரு செத்த பிணத்தை வைத்து அத்தனை தோட்டாக்களையும் மறைப்பது படத்தில் இருக்கும் மிகப்பெரிய காமெடி சீன். 30 நிமிடத்தில் சாகப்போகும் ஒருவனிடம், அஜித்தின் உருவத்தை வரையும் காட்சி கல்வெட்டுகளில் பொறிக்கபடவேண்டியவை. நம்ம ஊரு பவர் ஸ்டார் படத்தை மிஞ்சிய காட்சிகள் என பின்னால் வரும் சந்ததிகள் படித்து தெளிவாக புரிந்துகொள்ள உதவும்.

படத்தில் இருக்கும் ஒரே ப்ளஸ் லக்ஷ்மிமேனனும், அவருடைய குடும்பமும் தான். அது மட்டும் இல்லையென்றால் வேதாளம் 100% பாக்ஸ்ஆபிஸ் அல்டிமேட் பிளாப் தான். படம் முழுவதும் தன்னுடைய நடிப்புத்திறனை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார் லக்ஷ்மிமேனன். பார்வையிழந்த தந்தையாக வரும் தம்பிராமையாவும் கதைக்கு வலுசேர்த்துள்ளார். ஆனால், அதையும் பொண்ணுங்க இனிமே சுதந்திரமா நடமாடட்டும் எனக்கூறி தாய்மார்களுக்கும் பெண்களும் சமர்ப்பணம் என போட்டு குடும்பங்களை கவர்செய்து, தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் அஜித். இனிவரும் படங்களில் அவரின் அரசியல் வருகையின் பிரதிபளிப்பை இன்னும் அதிகம் காணலாம்.

ஒரு பிரமலமான விமர்சகர் அஜித் பற்றி விமர்சனம் செய்தால் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் அளவிற்கு அஜித்திற்கு கண்மூடித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தை பார்த்து ரசிப்பது ரசிகர்களின் குற்றமா? அவர்களுக்கு ஒரு அருமையான பிரியாணி சாப்பிட்டது போல் திருப்திகொடுக்கும் படம் கொடுக்காமல், பழைய சோற்றை காட்டி ரசிக்க சொல்லும் அஜித்தின் குற்றமா?

மொத்தத்தில் வேதாளம் அஜித்தின் அல்டிமேட் பிளாப்..!

satheesh srini

6 Comments

  1. Media la iruntha neutral ah cinema fan ah comment podanum Ajith hater ah poda koodatha.Media la irunthutu partiality parkara.

  2. Vedalam Flop nu ne sonna aiduma, summa edhachu review kudukanumnu vaiku vandhadha pesuradhu. Idhalam yenada polapu? Thu…. Mudinga ne oru sema blockbuster movie edthu katu ila mudinu iru……..

  3. Na vijay fan than bossq but nega sonna mari padam mokka kadaiyathu nalla iruku..mass katirukaru,sentiment supera iruku..puli la vijay than looseu thanama naduchuruparu…intha padathula yentha scene la thala looseu thanama naduchurukaru solluga boss…

Leave a Response