வாயில ப்ளேடு, கையில பீர்.. சும்மா கிர்ர் ஏத்தும் நயன்தாரா!

thirunaal-naynthara-jiiva

ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘திருநாள்’ படத்தின் ட்ரைலரை தீப ஒளித்திருநாளில் வெளியிட்டுள்ளனர். ட்ரைலர் முழுவதும் ப்ளேடுடன் வரும் ஜீவாவின் பெயரே ப்ளேடு தான். ட்ரைலரை பார்க்கும்போது, படம் அரசியல், ரவுடிசம் கலந்த அடிதடி படம்போல் தெரிகின்றது. அரசியல்ல வளர ரவுடி வேணும், ரவுடிசத்துல வளர அரசியல் மூளை வேணும் போன்ற நச் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. படம் கும்பகோணம், தஞ்சாவூர் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா சமீப காலமாக தான் நடிக்கும் படங்களில் எல்லாம் பீர் பாட்டிலை தொட்டு தொட்டு பெருமூச்சு விடுவது போலவே நடித்து வருகின்றார். நடிக்கும்போது குடிக்கமுடியவில்லை என்ற ஏக்கமா? இல்லை குடிப்பதுபோல் நடிக்கமுடியவில்லையே என்ற துக்கமா? எனத்தெரியவில்லை. ஜீவாவிற்கு போட்டியாக இவரும் வாயில் இருந்து ப்ளேடு எடுத்து மெர்சலாக்குகிறார். மேலும் கவர்ச்சியையும் பீர்பாட்டிலையும் ஒரே இடத்தில் பார்க்கும் போது சும்மா கிர்ர்னு ஏறுது. மேலும் இளசுகள் மனதை துள்ள வைக்கும் அளவிற்கு உள்ளது ‘திட்டாத திட்டாத அந்த வார்த்த சொல்லி திட்டாத’ பாடல்.

இந்த படத்தில் புதியதாக ஒரு பழைய இசையமைப்பாளர் அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்தின் மூலம் தன்னுடைய பெயரை ஸ்ரீ என மாற்றி அறிமுகம் செய்துகொண்டுள்ளார். பொதுவாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தால் பெயரை மாற்றுவது பெயரில் உள்ள எழுத்துகளை மாற்றுவது என்பது வழக்கம். ஏற்கனவே jeeva என்று இருந்த தனது பெயரை jiiva என்று மாற்றிகொண்டார் நடிகர் ஜீவா. தற்பொழுது அவருடைய படத்திலேயே ஸ்ரீகாந்த் தேவாவும் தன்னுடைய பெயரை ஸ்ரீ என மாற்றியுள்ளார். வாய்ப்புகள் குவிந்தால் சரிதான்.

அம்பாசமுத்திர அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

satheesh srini

Leave a Response