வேதாளம் – கதை கசிவு? சுட்ட கதையா??

batshaa-usthaat-vedalam-story

கொல்கத்தாவில் தங்கை லக்ஷ்மிமேனனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண டாக்சி ட்ரைவர் அஜித். திடிரென அங்கு மர்மான முறையில் பலர் கொலைசெய்யப்படுகின்றனர். இந்த கொலைகளை கண்டறியும் ரகசிய போலீசாக மங்காத்தா அஸ்வின் நியமிக்கப்படுகின்றார். அதே வேளையில் அஜித் தங்கை லக்ஷ்மிமேனனும் அஷ்வினும் காதலிக்கின்றனர்.

வக்கீலாக வரும் ஸ்ருதிகாசன் அஜித் மீது காதலில் விழுகின்றார். அப்பொழுது அஜித் பற்றிய பல ரகசியங்கள் ஸ்ருதிகாசனுக்கு தெரிய வருகின்றது. அங்கு நடந்த மர்ம கொலைகளுக்கு காரணம் அஜித் தான் என தெரிந்து அவரிடம் கேட்கும் போது அவருடைய பிளாஸ்பேக் சொல்கின்றார் அஜித்.

வேதாளம் அஜித் நார்த் மெட்ராசின் மிகப்பெரிய தாதா, அங்கு அஜித் வைத்தது தான் சட்டம். இந்நிலையில் அஜித்திடம் வேலை செய்யும், லக்ஷ்மிமேனனின் பார்வை இழந்த தந்தை தம்பி ராமையா கொலை செய்யப்படுகின்றார். அந்த சம்பவத்தில் லக்ஷ்மிமேனனுக்கு அடிபட்டு பழைய நினைவுகளை இழந்து விடுகின்றார். இதை கண்ட அஜித் வேதனையில் மனம் திருந்தி எல்லாவற்றையும் கைவிடுகின்றார். மேலும் கண்விழித்த லக்ஷ்மி மேனனிடம் நான் உன் அண்ணன் என பொய் சொல்லி கொல்கத்தா அழைத்து செல்கின்றார். இத்துடன் ப்ளஸ்பேக் முடிவடைகிறது.

அதன்பிறகு தன்னையும் தங்கையையும் கொலை செய்ய நினைக்கும் தன்னுடைய பழைய எதிரிகள் அனைவரையும் பழிவாங்குகின்றார். இறுதியாக லக்ஷ்மிமேனனின் காதலை ஏற்றுக்கொண்டு அஸ்வினுடன் திருமணம் செய்துவைக்கின்றார் அஜித். படத்தில் சூரி அஜித்தின் நண்பனாக படம்முழுவதும் வருகின்றார். அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இது ஒரு மாஸ் படம். முழுக்க முழுக்க மாஸ் கலந்த படமாக கொடுத்துள்ளார் வீரம் சிவா.

இந்த படத்தின் கதை ரஜினியின் பாஷாவையும், மோகன்லாலின் உஸ்தாத்தையும் கலந்து எடுத்துள்ளதாக படத்தை பார்த்த முக்கிய புள்ளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்பொழுது வேதாளம் படம், மலையாளம் மற்றும் தமிழின் இரண்டு சூப்பர் ஸ்டாரின் படங்களில் இருந்து எந்த உரிமையும் வாங்காமல் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேதாளம் கதை பாட்ஷாவில் இருந்து உருவியுள்ளனர் என பாட்ஷா படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ப்போவதாக அறிவித்தது. ஆனால் அஜித் மற்றும் சிவா தரப்பில் இது பாட்ஷா கதை இல்லை என மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. படம் வெளிவந்த பின்புதான் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தை பார்த்து விட்டு என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என தெரியவரும்.

மேலும், படம் வெளிவந்த பின்பு தான் தெரியும் அனைவருக்கும் பிடித்துள்ளதா? அல்லது அஜித் ரசிகர்களை மட்டும் மகிழ்வித்ததா? என்று.

satheesh srini

Leave a Response