விஜய் 59 டைட்டில் – மல்லுக்கு நிற்கும் விஜய், தாணு..!

vijay-thanu-fight-vijay59-title

அட்லீ இயக்கத்தில் 59வது படத்தில் விஜய் நடித்து வருகின்றார். இந்தப்படத்தை கலைப்புலி s.தாணு தயாரிக்கின்றார். இந்தப்படம் கதை சத்ரியன் படத்தை ஒத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன. மேலும் படத்திற்காக மூன்று டைட்டில் செலக்ட் செய்துள்ளார் அட்லீ. மூன்றுமுகம், காக்கி, வெற்றி ஆகிய மூன்றும் தான் அது. மூன்றுமுகம் டைட்டில் என்னதான் முயன்றாலும் கிடைக்காது என்ற நிலையாகிவிட்டது. அட்லீயிடம் ‘வெற்றி’ டைட்டில் தான் வைக்கவேண்டும் என உறுதியாக  தாணு கூறிவிட்டாராம்.

காக்கி டைட்டில் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், அந்த டைட்டிலும் வேறு ஒருவர் தன்னுடைய படத்திற்கு வைத்துவிட்டார். இருப்பினும் அந்த டைட்டிலை முறைப்படி வாங்கிவிடலாம் என நினைக்கும்போது அந்த டைட்டிலுக்கு தாணுவே முட்டுக்கட்டையாக நிற்கின்றாராம். இவர்களின் சண்டையில் உடைவது அட்லீயின் மண்டை தானாம். பேசமலாம் இந்த மூன்று டைட்டிலையும் மறந்துவிட்டு இருவருக்கும் பிடித்த மாதிரி புதிய டைட்டில் வைக்கலாமா? என ஆலோசனை செய்து வருகின்றாராம் அட்லீ.

satheesh srini

Leave a Response