கோபத்தின் உச்சத்தில் சிவா; மகிழ்ச்சியின் உச்சத்தில் லக்ஷ்மிமேனன்..!

ajith-siva-vedalam

வேதாளம் படம் முதல் நாளில் 17 கோடி வசூல்… 20 கோடி வசூல்… 25 கோடி வசூல்… என சமூகவலைதளங்களில் முகாமிட்டு மணிக்கு ஒருமுறை தண்டோரா போட்டுவருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆனால், உண்மையான வசூல் என்ன என்பது எங்களுக்கே இன்னும் முழுமையாக தெரியவில்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினமே கூறிவிட்டார். இப்படி ஒரு நிலையில் வேதாளம் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவி வருகின்றது.

வேதாளம் படப்பிடிப்பின்போது தொழில்நுட்ப வேலைக்காக இரண்டு உதவியாளர்களை கூடுதலாக வீரம் சிவா சேர்த்துக்கொண்டுள்ளார். ஏ.எம்.ரத்தினம் அந்த சமயத்தில் பண நெருக்கடியில் இருந்ததால் சிவாவே அவர்கள் இருவருக்கும் சொந்த பணத்தை சம்பளமாக கொடுத்துள்ளார். படம் வெளியான பின்பு மொத்தமாக திருப்பிக்கொடுத்தால் போதும் என ஏ.எம்.ரத்தினமிடம் அப்பொழுது கூறியுள்ளார் சிவா. ஆனால், படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் சிவாவிற்கு சேரவேண்டிய சம்பளத்தையும், அவர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொடுத்த சம்பளத்தையும் ஏ.எம்..ரத்தினம் திருப்பிதரவில்லை என கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்படுகின்றது. பலமுறை கேட்டும் ஏ.எம்.ரத்தினத்திடம் இருந்து முறையான பதில்கள் ஏதும்வரவில்லையாம்!

விஜய்யின் புலி படம் பணப்பிரச்சனையால் ரிலீசாகாமல் முடங்கியபோது ஏ.எம்.ரத்தினம் டி.ஆருடன் இணைந்து வேண்டிய உதவிகளை செய்தார். அடுத்தவரின் படங்களுக்கே முன்னின்று உதவிபுரியும் ஏ.எம்.ரத்தினம், சிவாவிற்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளார் என்ற செய்தி பலமுனையில் சந்தேகத்தை கிளப்பிஉள்ளது.

வேதாளம் படம் உண்மையிலேயே லாபத்திற்கு விற்கப்பட்டதா?,

லாபம் எடுத்துவிட்டதா??,

இன்னும் முழுமையான லாபம் கிடைக்கவில்லையா???,

படத்தின் பட்ஜெட்டைவிட குறைவான வசூலா????,

சொன்ன பட்ஜெட்டைவிட செலவை அதிகப்படுத்திவிட்டாரா சிவா?????

எதற்காக அவருக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கின்றனர் என சந்தேகம் எழத்துவங்கியுள்ளது.

வேதாளம் படதிற்காக, அஜித்திற்கு ஒரு பெரிய தொகை சம்பளமாகவும், படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு கொடுப்பதாக ஏ.எம்.ரத்தினம் ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன. சிவாவிற்கு மட்டும் சம்பளம் பாக்கி உள்ள நிலையில், லட்சுமிமேனனுக்கு இன்னும் கூடுதல் சம்பளம் கொடுக்கவேண்டும் என ஏ.எம்.ரத்தினத்தை அஜித் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. படத்தின் வசூலுக்கு காரணம் அஜித் என்பதைபோல, படத்தின் வெற்றிக்கு லக்ஷ்மிமேனன் தான் முக்கிய காரணம். இதனால் அஜித் அவருக்கு மேலும் சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்கவேண்டும் என ஏ.எம்.ரத்தினத்திடம் கூறினாராம். ஆனால் சிவா விஷயத்தில் அஜித்தும் வாயே திறக்கவில்லையாம். ஒருவேளை சிவா எடுத்த இப்படம் அஜித்திற்கு பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவர்கள் தான் வாய் திறந்து விடை கூறவேண்டும்.

சம்பள அதிகமானதாலும், வேதாளம் படத்தில் நன்றாக நடித்ததால் வாய்ப்புகள் அதிகம் குவிவதாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளாராம் லக்ஷிமேனன். ஆனால் சிவாவோ கோபத்தின் உச்சத்தில் உள்ளாராம்.

satheesh srini

Leave a Response