சிக்கலில் ரஜினி; ஆட்டிப்படைக்கும் மலேசிய டான் – அதிர்ச்சி ரிப்போர்ட்..!

malaysia-rajini-don-flight

ரஜினி மலேசியாவின் மோசக்காரன் ஒருவனின் பிடியில் சிக்கியதாக தமிழின் முன்னணி பத்திரிக்கை செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செய்தியும் ரஜினியின் மலேசிய பயணமும் ஒரு மர்மமுடிச்சாக மாறியுள்ளது.

ரஜினியிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் ஒரு நாளும் ஆடம்பரத்தை விரும்பியதில்லை. நீண்ட நாட்களாக ரஜினி வைத்திருந்த அம்பாஸிடர் காரை தற்பொழுது தான் மாற்றினார். இரு வருடங்களுக்கு முன்பு அவர் வாங்கிய இன்னோவா காரை தான் பயன்படுத்தி வருகிறார். தன்னால் எந்த விலை உயர்ந்த பொருளை வாங்க கூடிய செல்வாக்கு இருந்தும், அவர் தேவைக்கு ஏற்ற ஆடம்பரமில்லாத பொருளைத்தான் விரும்புபவர். அப்படித்தான் அவருடைய இன்னோவா காரும். அவர் சாதாரண ரப்பர் செருப்பு தான் அணிவார். வீட்டில் இருக்கும்போது தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொண்டு சாமியார் கோலத்தில் தான் இருப்பார் ரஜினி. சாதாரண ரஜினியாக ஆரம்பித்தது முதல் பிறகு சூப்பர்ஸ்டாராக ஆகியும் மலேசியா செல்லும் வரை ரஜினி சிம்பிளாக தான் வாழ்ந்தார். ஆனால் கபாலி படப்பிடிப்பிற்காக அவர் சென்ற மலேசிய பயணம் ரஜினியின் வாழ்கையை தலைகீழாக மாற்றியுள்ளது.

மலேசியாவில் ரஜினிக்கு பலத்த வரவேற்ப்பு என்ற பெயரில் ரஜினியை வைத்து அங்குள்ள சிலர் விளம்பரம் தேடிக்கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. எங்கு சென்றாலும் 20 பாடிகார்டுகளுக்கு மத்தியில், விலையுயர்ந்த காரில் ஆடம்பரத்துடன் கம்பீரமாக செல்கின்றார். இப்படி செலவு செய்தால் படத்தின் தயாரிப்பு பட்ஜெட் எகிறிவிடுமே என்று பலரும் நினைத்தனர். ஆனால், இந்த செலவு தயாரிப்பாளருடையது அல்லவாம், மலேசியாவில் இருக்கும் மோசக்காரானுடையதாம். அந்த நபர் மீது ஹவாலா புகார்கள் நிறைய இருக்கிறதாம். பல வழக்குகளும் இருக்கிறதாம். இப்படிபட்ட ஒருவரின் பிடியில் தான் ரஜினி உள்ளார்.

ஒருவேளை அந்த ஆடம்பர கார் செலவு மோசக்காரனுடையது இல்லை என்றால் அது தயாரிப்பு செலவில் தானே சேரும். அப்படிப்பட்ட தேவையற்ற செலவை ரஜினி என்றுமே விரும்புவதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு ஏற்ப்பட்ட உடல்நல குறைவின்போது, டாக்டர்கள் ரஜினி தேவையில்லாத கூட்டங்களை இனி தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லியிருந்தனர். அதையே இந்தியாவில் இந்த மூன்று ஆண்டுகளாக பின்பற்றி வந்திருந்தார். சென்ற ஆண்டு லிங்கா படப்பிடிப்பின்போது அவர் ஆடம்பரம்மிக்க கேரவனை விரும்பவில்லை. ஆடைகள் மாற்றும்போது கூட திறந்தவெளியில் அதுவும் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு லுங்கி மறைவில் உடைகளை சிம்பிலாகா மாற்றிகொண்டார். உணவு உண்ணும்போது மட்டும் அந்த கேரவன் வண்டியை உபயோகித்தார்.

அப்படிப்பட்ட சிம்பிளான ரஜினியை ஆடம்பர ரஜினியாக விளம்பரப்படுத்துவது யார்? ரஜினி மீது அக்கறை உடைய எவராவது ரஜினியை இப்படி ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கவிடுவார்களா?? ரஜினியின் இயல்பை மாற்றுபவர்களை ரஜினி ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா??? ரஜினிக்கு மலேசியாவில் தனி செல்வாக்கு உள்ளபோதிலும், அந்த டானின் கைபொம்மையாக மாறியது அவர் ஏதே சிக்கலில் மாட்டியுள்ளார் என்றே தோன்றுகிறது.

ரஜினியை பிரபலப்படுத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது. இந்த பயணம் மலேசிய மட்டும் இல்லாமல் சிங்கபூர், ஜப்பான், சைனாவிலும் அவரை பற்றிய செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே அவருக்கு இருக்கும் ரசிகர்படையை விட இது இன்னும் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் ரஜினியின் மலேசிய பயணம், மலேசிய விமானம் காணமல் போனது போல மர்மமுடிச்சாக உள்ளது. ரஜினி சிக்கலின்றி நாடுதிரும்பினால் சரி..!

satheesh srini

Leave a Response