பைக்கா? காதலியா? தடுமாற்றத்தில் சிம்பு..!

simbu-acham-makima

 

இயக்குனர் கௌதம்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. தலைப்புக்கு ஏற்றார் போல படமும் நல்ல கதையம்சதுடன் உருவாகி வருகின்றதாம். படத்தில் சிம்பு ஒரு பைக் ரேஸ் பிரியராம். பைக்கில் ஊர் ஊராக சுற்றுவது தான் இவருடைய வேலையாம். கதாநாயகி பல்லவி சுபாசுடன் காதல் ஏற்பட்டதும் பிரச்சனை மேல் பிரச்னையாம். ஒரு கட்டத்தில் பைக்கா? காதலியா? என்கின்ற நிலைக்கு சிம்பு தள்ளப்படுகின்றார். தடுமாற்றத்தில் இருக்கும் சிம்பு என்ன ஆனார் என்பது தான் க்ளைமாக்ஸ். இதை தனக்கே உரிய பாணியில் கௌதம்மேனன் சொல்லியுள்ளாராம்.

இப்படத்தில் சிம்பு, பல்லவி சுபாஸ், மஞ்சிமா மோகன், ராணா டகுபதி, பாபா சேகல், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரையில் வெளியிட மும்முரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 –satheesh srini

Leave a Response