விருதுகளை திருப்பிக்கொடுத்து எதிர்ப்பை தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை – கமலஹாசன்

kamal-never-return-award
தற்போதைய மத்தியஅரசின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல துறைகளை சார்ந்த பலர் தங்களுடைய மத்திய அரசு விருதுகளை திருப்பி கொடுத்துவருகின்றனர்.ஹைதரபாத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமலிடம், விருதுகளை திருப்பிக்கொடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பீரா? எனக்கேட்கப்பட்டது. அதற்கு கமல் அளித்த பதில் பின்வருமாறு,நான் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. அதே சமயம் அணைத்து மதத்திற்கும் மதிப்பளிப்பவன். விருதுகளை திருப்பி கொடுத்து எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு பதில் வேறு ஏதாவது வழியில் முயற்சிக்கவேண்டும். நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை, எந்தகட்சி ஆட்சியில் இருந்தாலும் நான் என்னுடைய நாட்டை விட்டு கொடுக்கமாட்டேன். நாம் தெரிவிக்கும் எதிர்ப்பு நாட்டை இரண்டாக பிளவு படுத்தக்கூடாது.

1947ல் சகிப்புதன்மை இல்லாத இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தனியாக பிரிந்தது. அப்படி நடக்காமல் இருந்த்திருந்தால் இந்தியா பிளவே இல்லாத ஒரே நாடாக இருந்து சீனா போன்ற நாடுகளுக்கு மத்தியில் நம் நாடு பொருளாதாரத்தில் முன்னின்றிருக்கும். எனவே விருதுகளை திருப்பிகொடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணம் எனக்கில்லை. இவ்வாறு கமல் கூறினார்.

Leave a Response