“என் கதாநாயகி சாவித்திரியம்மா மாதிரி” – இசை’ நாயகி பற்றி எஸ்.ஜே.சூர்யா புகழாரம்..!

நீண்ட இடைவெளிக்கு அப்புறமா எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிச்சுட்டு வர்ற படம் ‘இசை’. இந்தப்படத்துக்கு இசையமைச்சிருக்கிறதும் அவர் தான். இந்த படம் 2 இசையமைப்பாளர்களை சுத்தி நடக்குற கதை. அவர்களிடையே ஏற்படுற ஈகோ மோதலை பத்திய கதைன்னும் குறிப்பா இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ரெண்டுபேரை பத்தினதுதான்னு சினிமா வட்டாரத்துல ரொம்ப நாளாகவே ஒரு சலசலப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ‘இசை’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இசை குறுந்தகடை விஜய், தனுஷ் இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள்.

இந்த விழாவில் இறுதியாக பேசிய எஸ்.ஜே.சூர்யா “’வாலி’ யாகட்டும் ‘குஷி’ யாகட்டும் என்படத்தில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். ‘இசை’ யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேடவில்லை. அந்த கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன். பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. இவர் நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார். சமகால சாவித்ரி போல தோன்றினார். நிச்சயம் அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.” கதாநாயகிக்கு இப்போதே புகழாரம் சூட்டினார்.