‘திருடன் போலீஸ்’ படத்தை கழுவி ஊற்றிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!

பொதுவாக சினிமாகாரர்கள்.. அது நடிகரோ அல்லது, இயக்குனரோ மற்றவர்கள் படங்களை பார்த்து நன்றாக இருக்கிறது என சொல்வார்களோ இல்லையோ மோசமாக இருக்கிறது என்று சத்தியமாக, வெளிப்படையாக சொல்லமாட்டர்கள்.

ஒரு நடிகையாக, மட்டும் இல்லாமல் ஒரு இயக்குனராகவும் மாறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த இங்கிதம் கூட தெரியாமல் சமீபத்தில் வெளியான ‘திருடன் போலீஸ்’ படத்தைப்பற்றி ட்விட்டரில் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

அதில் படத்தை பற்றியும் அதன் ஹீரோ அட்டகத்தி தினேஷின் நடிப்பையும், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸின் தோற்றம் பற்றியும் ஹீரோவின் நண்பனாக நடித்துள்ள பாலாவின் காமெடி பற்றியும் நிதின் சத்யாவின் அம்மாவாக வரும் உமா பத்மநாபன் கேரக்டர் பற்றியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

இதில் கூடவே உங்களை விமர்சிக்கிறவர்கள் நிச்சயம் உங்கள் நலம் விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.. அது உங்களது வளர்ச்சிக்குத்தான் உதவும் என்கிற ரீதியிலும் ஒரு கமெண்ட்டை தட்டிவிட்டுள்ளார். இது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணனின் கமெண்ட்டுகளை படிக்க வேண்டுமா..? கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்கள்..

https://twitter.com/LakshmyRamki