பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘பில்லா பாண்டி’ மற்றும் ‘வேட்டை நாய்’ என்கின்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்க இருக்கிறார். இதுவரை ஆர்.கே.சுரேஷ் ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த டைசன் படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். பிரமாண்ட பொருட்செலவில்
ஸ்டுடியோ 9 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.