ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘மைம்’கோபி நடத்திய கலைநிகழ்ச்சி..!

தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற, நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக ‘மா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி, இந்த தெய்வ குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் ‘மைம்’ கோபி. .

‘மைம்’ ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனரான மைம் கோபி, “மைம்” கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்சியையும் கற்பித்து வருபவர். அந்தவகையில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரத்யேகமாக ‘மா’ என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது. ஊனமுற்ற ஒரு குழந்தை இந்த சமுதாயத்தில் அன்றாடம் சந்திக்கும் சிக்கலையும், அந்தக்குழந்தையின் தாய் படும் வேதனையையும் உண்மையையும் உணர்வுப்பூர்வமாக வசனமில்லாத நடிப்பின் மூலம் தங்கள் குழுவினரோடு பார்வையாளர்களை ஒரு மணி நேரத்திக்கும் மேலாக கட்டிப்போட்டு அனைவரயும் கலங்க வைத்தனர்

இயக்குனர் பிரபு சாலமன், பாண்டிராஜ், ரஞ்சித், பாலாஜி மோகன், நடிகர் கார்த்தி, காளி, ஜான் விஜய், அசோக், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..

இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்,

“ஜி “மைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004