ஸ்டாலினுக்கு விளம்பரம் தேவை : அதனால் தான் கிராம சபை கூட்டம் – செல்லூர் ராஜூ விளாசல்..!

கிராம சபை கூட்டத்துக்கு செல்லப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, வெறும் விளம்பரம் தேடும் முயற்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரியிலிருந்து மக்களை நேரிடியாக சந்திக்கும் கிராம சபை கூட்டம் சம்பந்தமான அறிவிப்பினை ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கூட்டுறவு சங்கத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

“எங்கள் மேல் என்ன குற்றம் குறைகளை சொல்ல முடியும்? எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு விளம்பரம் தேவை. அதற்காக கிராம சபை கூட்டத்துக்கு போக போவதாக சொல்கிறார், அவ்வளவுதான்” என்றார்.

பின்னர் அமமுக அணி அதிமுகவுடன் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு, “தினகரனையே நாங்கள் எப்பவுமே மதிப்பதில்லை. இணைப்பு பற்றி பலமுறை முதல்வர், துணை முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதிமுக, அமமுக இணைவதாக இருந்தால் சசிகலா, தினகரனை தவிர்த்து யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தங்க. தமிழ்செல்வன் கூட எங்களுடன் இணையலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

40 நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக வலுவாகவே இருக்கிறது. திமுகவை மக்கள் ஏற்ககொள்ள மாட்டார்கள். அதேபோல, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

 

Leave a Response