ரசிகர்களை கவர்ந்துள்ள “விஸ்வாசம்” கண்ணான கண்ணே பாடல்..!

சிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பி ராமய்யா என பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை ப்ரைம் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான அடிச்சுத்தூக்கு, வேட்டிக்கட்டு, தல்லே தில்லாலே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் சென்சார் செய்யப்பட்டு, யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Response