“பேட்ட” ட்ரைலர் : அதிரும் தமிழகம் – ரசிகர்கள் உற்சாகம்..!

பேட்ட படத்தின் ட்ரைலர் இன்று 28ம் தேதி வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு மிகப் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது, சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக மிரட்டியுள்ளார். மேலும் பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடிக்க, தற்போது பேட்ட ட்ரைலர் எப்போது என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தனர். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே இன்று 28ம் தேதி பேட்ட ட்ரைலர் வருவதாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இப்படத்தின் ட்ரைலர் படு மாஸாக வெளியாகி உள்ளது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.

Leave a Response