2024-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அதிமுக வரவேற்கும்; அமைச்சர் ஜெயக்குமார்..!

2024-ல் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேர தேர்தல் நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை மலை சீனிவாசன் 159-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம். சட்டமன்ற தேர்தலுடன், நாடாளுமன்ற தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிந்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும்.

ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது வரவேற்கத்தக்கது.2024-ம் ஆண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அப்படி நடத்தினால் அதனை அதிமுக வரவேற்கும் என்றார்.இந்நிலையில் ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Leave a Response