போக்குவரத்து தொழிலாளர்களுடன் இழுபறி.. எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழிசை எச்சரிக்கை..

Tamilisai_14321

எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பான திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். எம்எல்ஏ ஊதியத்தை ரூ.55,000லிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி கடந்தாண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓகி புயலில் காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர் தேவாவின் வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்திதார்.போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்காமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தியிருப்பது சுயநலமானது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு குறித்து பேசிய அவர், அவர்களை தக்க வைத்துக்கொள்ள அதிமுக அரசு எடுத்த சுயநலமான முடிவு இது என்று குறிப்பிட்டார்.போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *