சங்கம் அமைத்து போராட முயற்சி; போலீசார் கூண்டோடு இடமாற்றம்

1440706312-7686

தமிழக பட்டாலியன் போலீசார், சங்கம் அமைத்து போராட்டத்தில் குதிக்க உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, அவர்களை கூண்டோடு மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
தமிழக போலீசார், தங்களுக்கு அரசு ஊழியர் களுக்கு இணையான சம்பளம், சலுகைகள், பணி வரன்முறை படுத்தக் கோருதல் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்களுக்குள், ‘வாட்ஸ் – ஆப், பேஸ்புக்’ மூலம் குழுக்களை ஏற்படுத்தி, போலீசாரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டு வருகின்றனர்.இதில், போலீசின், 16 பட்டாலியன்களில் பணியாற்றும் இளம் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இவர்கள், பாதுகாப்புக்கு சென்ற, சேலம், தேனி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடந்த, எம்.ஜி.ஆர்.,நுாற்றாண்டு விழாவில், போலீஸ் சார்பில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை ஏற்க மறுத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில இடங்களில், போலீசார் தங்களுக்கு வழங்கிய உணவு பொட்டலங்களை, பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் வழங்கி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து உளவுத்துறை போலீசார், அரசின் பார்வைக்கும், தமிழக, டி.ஜி.பி., ஆயுதப்படை, ஏ.டி.ஜி., ஆகியோருக்கு அறிக்கையை அனுப்பினர்.

police_19285

அதை தொடர்ந்து, முதல்கட்டமாக, பட்டாலியன் போலீசாரின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முடக்கும் வகையில், பட்டாலியன் களுக்கு இடை யில் போலீசாரை பணி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில், முதல் கட்டமாக, திருச்சி, ஆவடி, வீரபுரம், ஆவடி பட்டாலியன் – 5 ஆகியவற்றில்பணியாற்றிய, 408 போலீசாரை, பட்டாலியன் விட்டு பட்டாலியன் பணி மாற்றம் செய்து,ஆயுதப்படை, டி.ஜி.பி., ஷகில் அக்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மாற்றத்தை தொடர்ந்து, மேலும், 12 பட்டாலியன்களில், பணியாற்றும், 1,500க்கும் மேற்பட்ட போலீசாரை பணிமாற்றம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது

Leave a Response