700 கோடிக்கு இருப்பு வைப்பு, 500 கோடி டார்கெட்; அடடே! பிளான் போடும் தமிழக அரசு!

04-1420351509-tasmac55-600

தீபாவளிக்காக டாஸ்மாக்’ கடைகளில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.  500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில்  தினசரி சராசரியாக 50 ஆயிரம் பெட்டி பீர் ,  1.25 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. இவற்றின் மதிப்பு, 70 கோடி ரூபாய் வார விடுமுறையில் மது விற்பனை 100 கோடி ரூபாயை தாண்டும்.

இதை விட ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை எகிறும். இந்நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்படுவதால், 500 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tasmac (1)

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிக விற்பனையாகும் கடைகளில், ஏழு நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. தீபாவளியை ஒட்டி, அனைத்து கடைகளுக்கும், 10 நாட்களுக்கு தேவையான, 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் அனுப்பப்பட்டு உள்ளன.

மது வகைகள் விலையை உயர்த்தியதால், அதன் விற்பனை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலரும் விலை உயர்வுக்கு எதிராக, அரசை கடுமையாக விமர்சிக்கின்றனரே தவிர, மது வாங்குவதை குறைக்கவில்லை என கள ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த, 2016 தீபாவளியின் போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள், தீபாவளியை விமர்சையாக கொண்டாடவில்லை. அதனால், தீபாவளி மது விற்பனை, 330 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, தீபாவளி களை கட்டியுள்ளது.

tasmac

மது விற்பனை, இன்று முதல் அதிகம் இருக்கும். இன்றும், நாளையும் சேர்த்து, 500 கோடி ரூபாய்க்கு விற்பனை இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடையை தவிர்த்து கள்ளச் சந்தையில் மது விற்பதை தடுக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

டாஸ்மாக் கடை ஊழியர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையுடன் ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். அந்த வகையில் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் வரை கமிஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Response