‘வேலைக்காரன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய எஸ்.பி.ஐ. சினிமாஸ்!

velaikaran1xx

‘வேலைக்காரன்’ படத்தின் சென்னையின் திரையரங்கு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் கைப்பற்றியிருக்கிறது

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.
the-servant-of-the-movie-started-to-show-the-mass-business-do-you-know-who-captured-it-feature-image-1cXJJmEVs6yEc0IAcIIcSO

பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் சென்னை திரையரங்கு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் கைப்பற்றியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response