மண்புழு உரத்திலுள்ள சத்துகள் என்னென்ன?

 

6a4a5281-8c86-4b1d-a3c3-1baf180d4fc7

மண்புழு விவசாயின் நண்பன் என்பார்கள்.வ்ஒரு மண்சார்ந்த பகுதியின் செழிப்பை வளர்ச்சியை அதில் வாழும் மண்புழுக்களை வைத்தே சொல்லிவிடலாம். மண்புழுக்களின் செழிப்புதான் வளரும் பயிர்களை செழிப்புடன் எடுத்துச்செல்லும். மண்ணின் தரத்தையும் மண்புழுக்களே மேம்படுத்துகின்றன.

அந்த மண்புழு சார்ந்த உரங்கள் தற்போது செயற்கையான முறையில் பல இடங்கள் தயாரிக்கப்டுகின்றன. அந்த மண்புழு ஊட்டச்சத்து உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.

 

பொதுவாக மண் புழு உரத்தில் 15 – 21 சதவீதம் அங்கக கார்பன், 0.5 – 2 சதவீதம் தழைச்சத்து, 0.1 – 0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5 – 1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

DSC_4987

மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

 

எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் கொடுக்கணும்?

 

நெல், கரும்பு, வாழை – 2000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

 

மிளகாய், கத்தரி, தக்காளி – 1000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

 

நிலக்கடலை, பயறுவகைகள் – 600 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

 

மக்காச்சோளம், சூரியகாந்தி – 1000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

 

தென்னைமரம், பழமரங்கள் – ஒரு மரத்துக்கு 10 கிலோ மண்புழு உரம்

 

மரங்கள் – 5 கிலோ மரம் ஒன்றுக்கு மண்புழு உரம்

மாடித் தோட்டம் – 2 கிலோ மண்புழு உரம் / செடிக்கு

 

மல்லிகை, முல்லை, ரோஜா – 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்.

Leave a Response