பாசப் போராட்டம் அம்மா அம்மம்மா!!

ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா என்று பெயரிட்டுள்ளனர் இந்த படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – K.V.மணி, இசை – M.V.ரகு. திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலுமணிவண்ணன்.

படம் பற்றி இயக்குனர் பாலு மணிவண்ணன் கூறும்போது, “நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.

ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச் சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.

இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக அந்த குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா கெஞ்ச குழந்தையை அவர்களிடம் தருகிறார் ஆனந்த். இது ஆனந்தின் பத்து வயது முதல் மகனுக்கு பிடிக்கவில்லை காரணம் பிறந்த பெண் குழந்தையை தன் அம்மாவாக அவன் நினைப்பது.

அப்பாவிடம் அவன் அடிக்கடி தங்கை வேண்டும் என்று வலியுறுத்துவதால் ஏற்படும் சென்டிமென்ட் சிக்கலில் திரைக்கதை நகர்கிறது. சுஜிதா தன் அக்காள் பையனின் பக்கம் சேர்ந்து குழந்தையை திரும்ப பெற எடுக்கும் நடவடிக்கைகள் சுவாரஸ்யமானவை.

முடிவில் சரண்யா – சம்பத் தம்பதியிடம் இருந்து குழந்தையை திரும்ப பெற்றார்களா  என்பதை செண்டிமென்ட்டுடன் சொல்கிறோம் என்கிறார் இயக்குனர் பாலு மணிவண்ணன்.