விநாயகர் சதுர்த்திக்கு வருது விஷாலின் “மத கஜ ராஜா”!

IMG_8036

கலகலப்பு முடிந்த கையோடு சுந்தர்.சி. ஆரம்பித்த படம் மதகஜராஜா. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மணிவண்ணன் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டு அவர்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் மத கஜ ராஜா படத்தின் வெளியீட்டு உரிமையை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் வாங்கி வெளியிடுகிறார். செப்டம்பர் 6 விநாயகர் சதுர்த்தி வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மும்முரமாக செய்ய ஆரம்பித்து விட்டார் விஷால்.

இதனையொட்டி படத்துக்காக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது பேசிய சுந்தர்.சி, “நான் எவ்வளோ படங்களை இயக்கி விட்டேன். சாதரணமாக பண்ண படங்கள் கூட ஈசியா ரிலீஸ் ஆச்சு. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ண மதகஜராஜா வெளியாகாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. சந்தானம் என மற்ற படங்களில் 5 நாள், ஏழு நாள் தான் நடித்து கொடுத்துள்ளார். ஆனால இந்த படத்தில் முழுவதும் எங்களோடு இருந்து நடித்து கொடுத்துள்ளார். கலர்புல்லா ஒரு படம் பண்ண ரொம்ப நாள் ஆசை. நான் பண்ணிட்டேன். உங்களை இந்த படம் ரொம்ப திருப்திபடுத்தும்” என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது, “இந்த ‘சிக்ஸ்பேக்’கை செய்தால் கிட்னி பெயிலியராகுமா..?” என்று கேட்கிறீர்கள். இதுவரை அப்படி ஏதும் நான் உணர்ந்ததில்லை. சிக்ஸ்பேக்’கை போடுற அன்னைக்கு ஒருநாள் மட்டும் நம்ம உடம்புல தண்ணியோட அளவு கம்மியா இருக்கணும். அந்தக்கெட்டப்போட ஒரு படத்துக்கு 5 நாட்கள் ஷூட்டிங் எடுத்தாங்கன்னா அந்த 5 நாட்கள் மட்டும் தான் அவங்க அந்த உடம்போட இருக்கணும். ஆனா அதையே கண்டினியூவ் பண்ணக்கூடாது.

நான் இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் முடிஞ்ச உடனே நான் நார்மல் ஃலைப்புக்கு மாறிட்டேன். அதேமாதிரி தான் படத்துக்கு தேவைப்படுற நாட்கள் மட்டும் அந்த சிக்ஸ்பேக் பண்ணிட்டு உடனே நம்மளோட நார்மல் ஃலைப்புக்கு திரும்பிடணும். அதையே நாம கண்டினியூவ் பண்ணினா உடல்ரீதியாக பிரச்சனை ஏற்படும்” என்றார் விஷால்.