Kick Ass 2 – விமர்சனம்!

kick-ass-2-mindy-macready

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யுனிவெர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து அனைவரையும் ரசிக்க வைத்த படம் கிக் ஆஸ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுகியுள்ளது. இந்த படத்தில் கிக் ஆஸ், ஹிட் கேர்ள் மற்றும் ரெட் மிஸ்ட் ஆகிய மூன்று பெரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர். ஜிம் கேரியும் நடித்துள்ளார்.

கிக் ஆஸ் நகரத்தில் உள்ள ஜிம் கேரியுடன் சேர்ந்து அவர்கள் குழுவுடன் இணைந்து நடக்கும் தவறுகளை தடுக்கின்றனர். அதே சமயத்தில் Mother F*****r என்ற பெயரில் வரும் ரெட் மிஸ்ட் ஒரு குழுவை ஒன்றிணைத்து இவர்களுக்கு எதிராக இருக்கிறார். இதற்கிடையில் ஹிட் கேர்ள்-ன் தந்தை அவளை எந்த பொது பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது என்று தடை விதிக்கிறார்.

Mother F*****r, மதர் ரஸ்யா, ப்ளாக் டெத், நைட் பிட்ச் ஆகியோருடன் சேர்ந்து கிக் ஆஸ் குழுவை அழிக்க ஆரம்பிக்கிறார்கள். இரண்டு பேர் இறந்து விட மீதி பேர் தப்பிக்கிறார்களா? என்பது மீதி கதை.

ஹிட் கேர்ள் கோல் மோரெட்ஸ் சண்டைக்கட்சிகளில் பின்னி எடுக்கிறார். ஒவ்வொரு முறையும் நாயகன் மற்றும் அவரது குழுவை இவர்தான் காப்பாற்றுகிறார். மிகவும் அழகாகவும் இருக்கிறார். அழகை காட்டும் காட்சிகளும் கியூட்டாக அமைந்துள்ளன.

கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-ன் அசத்தலான காமெடியில் அரங்கம் அதிர்கிறது. ஒவ்வொரு முறையும் அவரின் முகபாவனைகளிலும், வசனங்களிலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

என்னதான் கிக் ஆஸ் குழுவோடு இருந்தாலும் நிறைய முயற்சிக்கிறார்கள், மின்ட்ஸ்-ன் குழுவிடம் இருந்து தப்பிக்க. இரண்டாவது பாதியில் விறுவிறுப்பாக அமைகிறது சண்டைக்காட்சிகள்.

ஆக, காமெடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக கிக் ஆஸ் 2 அமையும் என்பதில் சந்தேகமில்லை.