தலைவா ரிலீஸ்! கொண்டாட்டத்திற்கு தயாராகும் சென்னை ரசிகர்கள்!

vijay-fans-celebrate-nanban-stills-3bd9e833

ரம்ஜானுக்கே வர வேண்டிய விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா பட ரிலீசை ஒட்டி ரசிகர்கள் ஏராளாமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் படம் ரிலீசே ஆகாததால் அதனை செயல்படுத்த முடியவில்லை.

தற்போது பிரச்சினைகள் ஓய்ந்து படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.

மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக் கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.