நாளை முதல் சசியின் “ஐந்து ஐந்து ஐந்து”!!

12 x 15 TAMIL (28-7-13) CMYK

இயக்குனர் சசியின் கடும் உழைப்பில்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த படம் 555. அதாவது ஐந்து ஐந்து ஐந்து. சென்னை சினிமா இந்தியா தயாரித்துள்ளது. பரத், சந்தானம்,மிருத்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் ரம்ஜான் வாரத்தில் எந்த படமும் வெளியாகததாலும், விடுமுறை நாட்கள் இருப்பதாலும் படத்தை நாளை உலகமெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்த படத்தின் பாடல்களும் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பரத்துக்கு இந்திப்பட வாய்ப்பை பெற்று தந்த இந்த படத்தில் பரத்தின் சிக்ஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.