காஜலை ஜோடியாக்கி கொண்ட உதயநிதி!

kaajal

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் “குருவி” மூலம் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால், தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் முடியும் முன்பே அடுத்த படத்துக்கான அறிவிப்பில் இறங்கி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் ஜகதீஷ் இந்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு நண்பேண்டா என்று பெயர் சூட்டியுள்ளனர். தன்னுடைய முதல் மற்றும் இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளுடன் நடித்த அவர், மூன்றாவது படத்துக்கும் ஒரு முன்னணி ஹீரோயினை ஒப்பந்தம் செய்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.