இம்மாதம் வெளியாகிறது தேசிங்கு ராஜா!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”. விமல் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார். சூரி, சிங்கம் புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினு சக்ரவர்த்தி, ரவிமரியா, வனிதா, வே.ஆ.மூர்த்தி, வி.ஞானவேல், சாமிநாதன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி. இசை – டி. இமான். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ். எழில்.

ஏற்கனவே விமல் காமெடியில் கலக்கி எடுப்பார் இந்த படத்திலும் காமெடியில் கலக்கி இருக்கிறார் கூடவே சூரி உட்பட பல நடிகர்களும் காமெடியில் கூட்டு சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள். இம்மாதம் வெளியாகிறது “தேசிங்கு ராஜா”.