ஒரே யூனிட்டில் ஒன்றாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகர்கள்!

barath

தமிழ் படங்களில் நடித்து வந்த பரத் முதன் முறையாக நடிக்கும் இந்தி படம் ஜாக்பாட். இந்த படத்தில் அவருடன் நசுருதீன் ஷா, சன்னி லியோன், சச்சின் ஜோஷி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியாகி விட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த பரத்துக்கும், நசுருதீன் ஷாவுக்கும் அடுத்தடுத்த நாளில் பிறந்த நாள் வர, இருவரும் படப்பிடிப்பிலேயே பிறந்த நாளை கொண்டாடி, ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். படக்குழுவினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் நடித்த “கில்லாடி”, “555” படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.