இயக்குனர் சாமி இயக்க, வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கொடையில் கங்காரு படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது. கலை இயக்குனர் தோட்டாதரணி பல லட்ச ரூபாய் செலவில் அமைத்த மிகப்பெரிய செட்டில் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
ஆனால் கடும் மழையின் பாதிப்பினால் கடந்த ஆறு நாட்களுக்கு மேல் சரியாக படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு சீன் கூட எடுக்க முடியாமல் போனது. மேலும் மழை நீடிக்கும் அபாயம் இருந்ததால் கங்காரு யூனிட் சென்னை திரும்பி விட்டது. செட் அப்படியே வைத்திருக்க ஆவண செய்து விட்டு திரும்பியுள்ள படக்குழு மழை ஓய்ந்ததும் ஐந்து நாட்கள் மீண்டும் படம் பிடிக்க அங்கு செல்லவுள்ளது.
அதுவரை சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்று வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இவர்களைப் போல் திரும்பியுள்ள இன்னொரு குழு எஸ்.ஜே.சூர்யாவின் இசை படக்குழு.