நூதன திருட்டின் மூலம் மணப்பெண்ணின் நகையை திருடிய கும்பல்

திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கு கிடையாது..

நேற்று நாமக்கல்லில் ஒரு பெண், 11 பேரை திருமணம் செய்து, அவர்களிடம் மோசடி செய்து, நகை, பணத்தை அபகரித்து சிக்கியிருக்கிறார்.. அதேபோல, சென்னையிலும் ஒரு டீக்கடைக்காரர் மோசடியில் சிக்கியிருக்கிறார்.. ஒரேநாளில் நடந்த இந்த தனித்தனி மோசடிகள் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.. யாரிந்த டீக்கடைக்காரர்?

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் சிவசண்முகம்… இவர் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, 2வது கல்யாணம் செய்ய பெண் தேடி வந்தார்,.

அப்போதுதான, 45 வயது தமிழ்ச்செல்வி என்ற பெண் புரோக்கரும், இவர் மூலம் வேறுபெண் புரோக்கர்களும் சிவசண்முகத்துக்கு அறிமுகமானார்கள்.. அனைவரும் சேர்ந்து 2வது திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி, 4 லட்சம் புரோக்கர் கமிஷன் சொல்லி உள்ளனர். அதற்கு ஒப்புக் கொண்ட சிவசண்முகம், ரூ.1.20 லட்சம் அட்வான்ஸ் தந்தார்.

பிறகு விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த தீபா என்ற 24 வயது பெண்ணை காண்பித்து, 2-வது திருமணத்தையும் கடந்த 7 தேதி சிவசண்முகத்துக்கு செய்து வைத்தனர். ஆனால், மறுநாளே தீபா சிவசண்முகம் வீட்டிலிருந்த நகை, வெள்ளி கொலுசுடன் மாயமானார்.. எல்லா பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்களே என்று அதிர்ச்சியில் சிவசுப்பிரமணியம், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி, புரோக்கர்கள் தமிழ்ச்செல்வி (45) திருச்சியை சேர்ந்த நாராயணன் என்கிற சங்கர் (54) தூத்துக்குடி வேல்முருகன் (55) திருப்புவனம் முத்துலட்சுமி (45) சிவகாசி கஸ்தூரி (38) மற்றும் புதுமணப்பெண் தீபா என 6 பேரையும் கைது செய்தனர்.

அப்போதுதான் தீபாவின் நிஜப்பெயர் ஜோதிமணி என்பதும், மதுரையை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. சிவசண்முகத்தை திருமணம் செய்து ஏமாற்ற 3 நாளைக்கு 30 ஆயிரம் வாங்கியிருக்கிறார்.. அத்துடன், 11 பேரை ஜோதிமணி திருமணம் செய்து மோசடி செய்ததும் அம்பலமாகியிருக்கிறது. இப்போது 6 பெண்களுமே கைதாகி சிறையில் உள்ளனர்.

இதேபோலவே சென்னையில் ஒரு டீக்கடைக்காரர் சிக்கியிருக்கிறார்.. கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் 33 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்.. இவர் கடந்த 2021ல் சென்னை அண்ணா நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அப்போதுதான், கொரட்டூரைச் சேர்ந்த சிவா என்ற 51 வயது நபருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக கூறி, நெருங்கி பழகியிருக்கிறார்.. பிறகு, ஓட்டல் பிசினஸ் துவங்க உள்ளதால், உன்னிடமிருக்கும் 110 சவரன் நகைகளையும், ரூ.1 லட்சம் பணத்தையும் தந்து உதவுமாறு கேட்டுள்ளார்.. உடனே அந்த பெண்ணும், தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர்தானே? என்ற நம்பிக்கையில், பணமும், நகையும் தந்துள்ளார்.

ஆனால், சிவா இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.. இதை கேள்விப்பட்ட அதிர்ந்துபோன அந்தபெண், தன்னிடம் வாங்கிய 110 சவரன் நகை, 1 லட்சத்தையும் திருப்பி தருமாறு கேட்டிருக்கிறார்..

இதனால் ஆவேசம் அடைந்த சிவா, அந்த பெண்ணை அடித்து தாக்கியிருக்கிறார்.. அத்துடன் மறுபடியும் நகைகளை கேட்டால்., உல்லாசமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்..

இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்த பெண், ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்… இந்த புகாரின்பேரில் சிவா கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக சொல்லியதைகேட்டு ஏமாந்ததுடன், நகை, பணத்தையும் இழந்துவிட்டு அழுது கொண்டிருக்கிறார் அந்த பெண்..!!

Leave a Response