ஒரே ஒரு கொலை செய்ய மட்டும் அனுமதிங்க: ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு பெண்ணின் வித்தியாசமான கோரிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர்‌ ரோஹிணி கட்சே‌.

இவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த நாடு புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் நாடாக கருதப்படும் நிலையில் அகிம்சை மற்றும் அமைதியை வலியுறுத்தி ஒரே ஒரு மன்னிப்புக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மும்பையில் ஒரு 12 வயது சிறுமியை கடத்திக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். நிலைமை எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்க.

உலக மக்கள் தொகை சீரமைப்பு கணக்கெடுப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் ஆசியாவில் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கான பாதுகாப்பாற்ற நாடாக கருதப்பட்டுள்ளது. இதில் பெண்கள் கடத்தல் மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் அடங்கும். எனவே பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மனநிலை,பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனநிலை போன்றவற்றை நாங்கள் கொல்ல நினைக்கிறோம். எனவே வாழ்வில் ஒரே ஒரு கொலை செய்ய மட்டும் பெண்களுக்கான அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கு தண்டனை எதுவும் வழங்கக்கூடாது. மேலும் அனைத்து பெண்களின் சார்பாகவும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response