இந்த ஆதாரம் போதுமா? ஸ்டாலின் அவர்களே! : ஞானசேகரன் பற்றி அதிமுக வெளியிட்ட வீடியோ!

சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் நிலையில், இதனை திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளி ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரத்தை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அடுத்தது வெளியிட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டவர்கள் உடன் குற்றவாளி ஞானசேகர் இருப்பது தெளியவாகியுள்ளது.

மேலும், திமுக சைதாப்பேட்டை கிழக்கு மாணவரணி துணை அமைப்பாளர் பதவியில் ஞானசேகர் இருப்பதாகவும் அதிமுக சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தது.அண்ணா பல்கலைகழக கற்பழிப்பு குற்றம் செய்தது என்று வந்த தகவலை கூச்சேமே இல்லாமல் பொய் சொல்லி பேட்டி குடுக்கும் திமுக அமைச்சர் ரகுபதி. வேக வேகமாக சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்? உண்மை பேச துணிவிருக்கா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://x.com/KovaiSathyan/status/1872193320862318626?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1872193320862318626%7Ctwgr%5Ebd725f4111d0b3230e1f3200277b4a74cdba951a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

இந்நிலையில், “அண்ணா பல்கலைகழக பாலியல் குற்றவாளி திமுக ஞானசேகர் திமுகிவின் 75வது பவள விழாவில். உடன் திமுக வட்ட செயலாளர் , ஞானசேகருக்கு போலிஸ் ஸ்டேஷன் சென்று வாதாடிய வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி மற்றும் மதிமுக கூட்டணி கட்சி உறுப்பினர். இந்த ஆதாரம் போதுமா முக ஸ்டாலின்” என்று அதிமுக ஐடி விங்க் தலைவர் கோவை சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://x.com/KovaiSathyan/status/1873668840300896396?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1873668840300896396%7Ctwgr%5Ebd725f4111d0b3230e1f3200277b4a74cdba951a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Leave a Response